CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் : நிர்வாகிகளுக்கு அழைப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2024, 3:23 pm

கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் 2024 – 25ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் KCP Infra Limited நிறுவனத் தலைவரும், CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் செயலாளருமான K.Chandraprakash தலைமையில், CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் தலைவர் திரு.R.உதயகுமார், பொருளாளர் திரு.A.அம்மாசையப்பன், துணைத் தலைவர் திரு.V.ராஜகோபால், துணைச் செயலாளர் திரு.T.மைக்கேல், துணைப் பொருளாளர் திரு.R. செல்வராஜ் ஆகியோரது முன்னிலையில் நடைபெற உள்ளது.

வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் ஹோட்டல் ரத்னா ரெசிடென்சியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கோவை PROPEL GROUP நிறுவனத்தின் JMD திரு. வெங்கடேஷ் அவர்கள் பங்கேற்கிறார்.

இந்த கூட்டத்தில் அலுவலக பணியாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள், கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர். இதற்காக CCCA சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்த கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மாலை 5.30 மணிக்கு தொடங்கும் கூட்டம் இரவு உணவுடன் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 160

    0

    0