குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த ஜார்ஜியா இளைஞர்: மடக்கி பிடித்த போலீசார்..பொதுமக்கள் பீதி..!!

Author: Rajesh
18 April 2022, 6:05 pm

கோவை: போத்தனூர் அருகே நள்ளிரவு சுற்றித்திரிந்த 25 வயது மதிக்கத்தக்க ஜார்ஜியா நாட்டு இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இட்டேரி பகுதியில் வழியாக போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிலையம் அருகே 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார்.

இதனை பார்த்த போலீசார் வாலிபரின் அருகே சென்று யார் எந்த ஊர் எதற்காக இங்கே நிற்கிறீர்கள் என்று கேட்டனர். அப்போது வாலிபர் பதில் அளித்த மொழி போலீசாருக்கு புரியவில்லை.

இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போலீஸ் நிலையம் வந்தனர் அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாலிபர் 25 வயதான ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் என்பது மட்டும் தெரிய வந்தது.

மேலும் அவர் பேசும் மொழி போலீசாருக்கு புரியவில்லை. அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை எனவே போலீசார் வாலிபரிடம் எதற்காக இங்கே வந்தார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ