270 அடி நீளம் கொண்ட காற்றாலை விசிறியை ஏற்றி சென்ற ராட்சத லாரி கவிழ்ந்து விபத்து : நூலிழையில் உயிர்தப்பிய ஓட்டுநர்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 April 2022, 10:39 pm

திண்டுக்கல் : சின்னாளபட்டி அருகே 270 அடி நீளம் கொண்ட காற்றாலை விசிறியை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 3 மணிக்கு நேரமாக போக்குவரத்து நீடித்தது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி, நாகர்கோவல் பகுதிக்கு தினசரி காற்றாலை மின் தயாரிப்புக்கான பாகங்கள் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 270 அடி நீளம் கொண்ட காற்றாலை விசிறிகள் லாரிக்கு ஒன்று வீதமாக 3 லாரிகள் ஏற்றிக் கொண்டு சென்றது.

லாரி மற்றும் விசிறியின் மொத்த நீளம் 300 அடி என்பதால் வளைவுகளில் லாரியை திருப்புவதற்காக அந்த லாரியின் பின்பக்கத்தில் சுமார் 180 அடி தூரத்தில் ஒரு பகுதியில் ஆப்ரேட்டர் அறை இருக்கும் அதில் ஆபரேட்டர் ஒருவர் அமர்ந்து முன் பக்க டயர்கள் திரும்புவதை பார்த்து ரிமோட் மூலம் பின்னால் உள்ள டயரை இயக்குவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று 12 மணியளவில் அந்த 3 லாரிகளும் திண்டுக்கல்லை அடுத்து மதுரை செல்லும் சாலையில் சின்னாளப்பட்டி அருகே உள்ள அம்பாத்துரை ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள திருப்பத்தில் சென்ற போது லாரி டிரைவர் ராமநாதன் லாரியை திருப்பிய போது பின்னால் இருந்த ஆபரேட்டரான உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சூரத் என்பவர் ரிமோட் மூலம் பின்பக்க டயரை திருப்ப முயன்றார்.

ஆனால் ரிமோட் வேலை செய்யாமல் போனதால் 300 அடி நீளம் கொண்ட காற்றாலை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் லாரி இன்ஜின் பகுதி ரோட்டிலேயே கவிழ்ந்தது. காற்றாலை விசிறியும் பின்னால் இருந்த ஆபரேட்டர் பகுதியியும் சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

லாரி கவிழ்ந்த போது அப்பகுதியில் பயங்கர சப்தம் கேட்டது. இந்த விபத்தில் டிரைவரும், ஆபரேட்டரும் காயமின்றி உயர் தப்பினர். சம்பவ இடத்திற்கு அம்பாத்துரை போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

இதனையடுத்து நெடுஞ்சாலை துறையினர், டோல்கேட் நிர்வாகம் காற்றாலை மின்விசிறி நிறுவனமான என்.டி.சி, இணைந்து கவிழ்ந்த லாரி மற்றும் காற்றாலை விசிறியை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

2-ராட்சத கிரேன் மூவம் முதலில் பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை கடும் பிரயத்தனத்திற்க்கு பிறகு தூக்கி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, சாய்ந்து கிடந்த காற்றாலை விசிறியையும் கிரேன் மூலம் தூக்கி அதே லாரியில் பொருத்தி காற்றாலை விசிறி தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இணைந்து ஒன்னறை டன் எடை கொண்ட காற்றாலை விசிறியை லாரியுடன் தூக்கி நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த மீட்பு பணியால் சுமார் 3-மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, 2-கிலோ மீட்டர் தூரம் ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்து பாதிப்பின்றி வாகனங்கள் சென்றன. அம்பாத்துரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1360

    0

    0