வாக்காளர்களுக்கு பரிசு மழை.. திமுகவினருக்கு காத்திருந்த ட்விஸ்ட் : விக்கிரவாண்டியில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2024, 7:00 pm

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடையும் நிலையில் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாத்தனூர் கிராமத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருள்கள் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படை அலுவலர் வட்டாட்சியர் ரகுராமன் தலைமையிலான பறக்கும் படையினர் வி.சாத்தனூர் கிராம பெருமாள் கோவில் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை செய்தனர்.

அப்பொழுது கோதண்டபாணி மகன் முத்து வயது 51 என்பவர் வீட்டில் சோதனை செய்ததில் அங்கு 400-க்கும் மேற்பட்ட எவர்சில்வர் பத்திரங்கள் இருந்தது தெரியவந்தது, இதையடுத்து அந்த பறிமுதல் செய்த அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பொருட்களை ஒப்படைத்தனர்.

மேலும் திமுகவினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருள் விநியோகம் செய்தது அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • S. J. Surya director comeback மீண்டும் இயக்குனராகும் பிரபல நடிகர் :10 வருட இடைவெளிக்கு பிறகு எடுத்த திடீர் முடிவு…!
  • Views: - 487

    0

    0