கரும்பு தோட்டத்துக்குள் சென்ற அத்தை.. வெளியான ஆபாச வீடியோ.. அதிர்ச்சியில் சிறுமி!
Author: Hariharasudhan12 December 2024, 7:11 pm
உத்தரப் பிரதேசத்தில் அத்தையை பிணையக் கைதியாக வைத்து, அவரது கண்முன்னே சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது அத்தை உடன் கிராமத்தின் அருகில் இருந்த கரும்புத் தோட்டத்துக்குச் சென்று உள்ளார். அப்போது, அங்கு இரண்டு இளைஞர்கள் வந்து உள்ளனர்.
கரும்பு தோட்டத்துக்குள் சென்ற அத்தை
அவர்கள், அத்தை மற்றும் சிறுமி ஆகிய இருவரையும் பிடித்து வைத்து உள்ளனர். இதில் அத்தையை இருவரும் பிணையக் கைதியாக வைத்து உள்ளனர். இதனையடுத்து, சிறுமியை மாறி மாறி இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இந்தச் சம்பவத்தின் போது சிறுமி மற்றும் அவரது அத்தை பயங்கர எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதையும் படியுங்க: 3 மாவட்ட மக்களே உஷார்.. மிதக்கும் தென்சென்னை.. Powerful ரெட் அலர்ட்..
இதனால் அவர்களைக் கொலை செய்து விடுவோம் எனக் கூறிவிட்டு, இருவரும் அங்கு இருந்து தப்பி உள்ளனர். பின்னர், அத்தை மற்றும் சிறுமி ஆகிய இருவரும் வீட்டுக்கு வந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, நடந்த கொடூர சம்பவத்தை சிறுமி தனது தந்தைக்கு தொலைபேசி வாயிலாகக் கூறி உள்ளார்.
இதனால் வேலை நிமித்தமாக வெளியூரில் இருந்த சிறுமியின் தந்தை, உடனடியாக சொந்த ஊருக்கு வந்து உள்ளார். ஆனால், இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை இருவரும் இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.
இந்த நிலையில், ஊருக்கு வந்த தந்தை, பாதிக்கப்பட்ட தனது மகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்தப் புகாரின் பேரில் ஊருக்கு வந்த போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சம்பவ இடத்தில் இருந்த அத்தை ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றனர். தொடர்ந்து, தப்பி ஓடிய இருவரை தேடுவதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.