இளம்பெண்ணை கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தை… வேலூரில் நொடியில் நடந்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2024, 10:55 am

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் ஊராட்சி்க்குட்பட்ட துருவம் அடுத்த கொள்ளை மேடு பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் வளர்மதி. இவர்களுக்கு 5 மகள்கள் உள்ள நிலையில் 4 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் 5வது மகளான அஞ்சலி(22). அரசு கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு விட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இவரது வீட்டின் பின்புறம் இன்று மாலை சிறுத்தை ஒன்று அஞ்சலியை கடித்து வாயில் கவ்வி தரதர வென இழுத்து சென்றுள்ளது.
அப்போது அதனை கண்ட அஞ்சலியின் உறவினர்கள் கத்தி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்

இதையும் படியுங்க: தங்கம் விலை கடும் சரிவு.. உடனே கிளம்புங்க!

அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சிறுத்தை அஞ்சலியை அங்கேயே போட்டு விட்டு ஓடிவிட்டது. முகம் முழுக்க நசுங்கிய அஞ்சலி இடதுபுற கை பாகம் வெட்டப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்த உறவினர் கதறி அழுதனர்.

தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட வன அலுவலர் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்