காஞ்சிபுரம் ; நடிகர் விஜய்யின் வீட்டு வாசலில் அழுது, சிசிடிவி கேமரா முன்னே நின்று வேண்டுகோள் விடுக்கும் 11ஆம் வகுப்பு மாணவியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஐய்யங்கார் குளம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் அதே பகுதியில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். சங்கரின் மனைவி பெயர் இந்திரா. இந்த தம்பதிகளுக்கு 16 வயது நிரம்பிய தமிழ்ச்செல்வி என்ற மகள் உள்ளார். தமிழ்ச்செல்வி காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு தனது குடும்பத்துடன் சங்கர் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் விஜய் ரசிகர் என்பதால், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
நடிகர் விஜய்யை எப்படியாவது பார்த்து விடலாம் என்ற எண்ணத்தில் விஜய்யின் வீட்டிற்கு சென்ற சங்கர் குடும்பத்தினர், அங்கு மிகப்பெரிய கேட் பூட்டி இருந்தை கண்டு செய்வதறியாது திகைத்து நின்றனர்.
விஜய்யை பார்க்க முடியாமல்போன வருத்தத்தில் இருந்த மாணவி தமிழ்செல்வி, அங்கிருந்த சிசிடிவி கேமரா முன் தன்னை எப்படியாவது நடிகர் விஜய்யை பார்க்க வருமாறு கெஞ்சி கொண்டிருந்தார். அதேபோல் சங்கரும் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
சம்பந்தப்பட்ட வீடியோவில் உங்களை பார்க்க வேண்டுமே! என்னை எப்படியாவது பார்க்க ஏற்பாடு செய்யுங்கள் என சிசிடிவி காட்சி மூலம் மாணவி தமிழ்ச்செல்வி அட்ராசிட்டி செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
படிக்கக்கூடிய வயதில் நடிகரை பார்க்க வேண்டும் என எண்ணி, அவருடைய அனுமதி பெறாமல் வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு அழுது புலம்பும் செயல் மற்ற பள்ளி மாணவ, மாணவிகளிடையே இது போன்ற எண்ணங்களை உண்டாக்கி விடும். நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் உள்ளவர்கள், அவருக்கு கடிதம் மூலம் தொடர்பு கொண்டு அனுமதியைப் பெற்றால் இது போன்ற ஏமாற்றங்களை தவிர்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.