உத்தரப் பிரதேசத்தில், ஆன்லைன் மூலம் காதலித்து ஏமாற்ற முயன்ற நபருக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரியா. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தீரஜ் என்ற நபரை ஆன்லைன் செயலி மூலமாகச் சந்தித்துள்ளார். பின்னர், இவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விட இருவரும் காதலித்து வந்துவுள்ளனர். ஆனால், பிரியாவிடம் தீரஜ் தனது பாலியல் ஆசைக்காகவே பழகியதாகக் கூறப்படுகிறது.
எனவே, அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தீரஜுக்கு இல்லை எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், பிரியாவோ தீரஜ் தான் தனது வாழ்க்கை என்று நம்பி இருந்துள்ளார். எனவே, அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பல முறை கெஞ்சி பார்த்துள்ளார்.
ஆனால் தீரஜ் அதற்கு சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரியா, தீரஜை இறுதியாக நேரில் சந்தித்து உள்ளார். அப்போது, ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து அவரை கொல்லவும் முயற்சி செய்துள்ளார். பின்னர் அவர் மயங்கி விழுந்த நிலையில், தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து அவரைத் தாக்கியும் இருக்கிறார்.
இதையும் படிங்க: தளபதி69-ல் இணைந்த பிரபல டான்ஸ் மாஸ்டர்…எந்த ரோலில் நடிக்கிறார் தெரியுமா..!
இது அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வர, அவர்கள் தீரஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தொடர்ந்து, தீரஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரியாவை கைது செய்துள்ளனர்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.