தலைதீபாவளி கொண்டாடிய அண்ணன் மகள்… கணவன் கண்முன்னே சித்தப்பா செய்த வெறிச்செயல்.. அதிர்ந்து போன குடும்பம்..

Author: Babu Lakshmanan
25 October 2022, 12:47 pm

தலைதீபாவளி கொண்டாடிய பெண் மீது கணவன் கண்முன்னே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற பெண்ணின் சித்தப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி – பவித்ரா. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவன் வீட்டில் புதுமண தம்பதிகளாக தலை தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென வீட்டிற்கு வந்த பவித்ராவின் சித்தப்பாவான கார்த்திக் (42), இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பவித்ரா மீது மண்ணெண்ணெய் ஊற்றி எறிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்து பாலாஜி மற்றும் அக்கம்பக்கத்தினர் கார்த்திக்-யை தடுத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பவித்ராவிற்கு லேசான தீ காயங்கள் ஏற்படவே, சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, சம்பவம் குறித்து எஸ்எஸ் காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!