காதலர் தினத்தன்று அதிர்ச்சி… காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு… தப்பியோடிய வாலிபர்..!!

Author: Babu Lakshmanan
14 February 2023, 8:58 am

மதுரையில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேல அனுப்பானடி வடிவேலன் தெரு பகுதியை சேர்ந்தவர் வேல்சாமி மகன் சரவணன் குமார். இவரது மகள் நிர்மலா மேல்நிலைபள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறாள்.

இந்த நிலையில் இதே தெருவில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மருதுபாண்டி என்பவரது மகன் மணிரத்னம் சரவணக்குமார் மகளை காதலித்தாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அடிதடி பிரச்சினையில் ஜெயிலுக்கு சென்றார்.

மணிரத்னம் மீது காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் உள்ள நிலையில், சமீபத்தில் ஜெயிலில் இருந்து வெளியே வந்தவ அவர், சிறுமியிடம் காதலிக்க வற்புறுத்தியுள்ளார்.

சிறுமி மறுக்கவே மணிரத்னம் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து நேற்று மாலை பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி பற்ற வைத்து வீசி விட்டு தப்பி விட்டார். இதில் வீட்டின் முன்புறம் சேதமாகின.

உடனே வந்த சரவணகுமார் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெருக்கமான குடியிருப்புகள் அமைந்த பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…