மொட்டை கடிதம்.. கம்ப்யூட்டர் லேபில் அரங்கேறிய கொடூரம்.. அரசுப் பள்ளி ஆசிரியர் சிக்கியது எப்படி?

Author: Hariharasudhan
22 February 2025, 9:49 am

தென்காசி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கணினி ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், டேவிட் மைக்கேல் என்பவர் கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் திருமணமானவர். இந்த நிலையில், இவர் அதே பள்ளியில் படித்து வரும் மூன்று மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஆனால், டேவிட் மைக்கேல் அந்த மாணவிகளுக்கு அதிகமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால், நடந்த சம்பவம் குறித்து வெளியே கூறினால், தாங்கள் பள்ளியில் பயில பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சியுள்ளனர். ஆனால், ஆசிரியரின் தொல்லை அதிகரித்தால் வேறு வழியில்லாமல் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக மாணவி ஒருவர், பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் எழுதி போட்டுள்ளார்.

அந்தப் புகாரில், அவர் தங்களுக்குச் செய்த கொடுமைகள் குறித்தும், கணினி ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட்டும் எழுதி இருந்தார். ஆனால், தனது படிப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற பயத்தில், அவர் தனது பெயரை புகார் கடிதத்தில் குறிப்பிடவில்லை.

Tenkasi Sexual abuse

இதனால் சுதாரித்துக் கொண்ட அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர், இது குறித்து மறைமுகமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதன்படி, அவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து, கணினி ஆசிரியர் டேவிட்டின் நடவடிக்கைகளை நாள்தோறும் கவனித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், குறிப்பிட்ட மூன்று மாணவிகளை மட்டும் வகுப்பு நேரத்தில் கணினி ஆசிரியர் டேவிட் மைக்கேல், அடிக்கடி கணினி பயிற்சி அளிக்கும் அறைக்குத் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். இதனை ஆசியர்கள் கவனித்துள்ளனர். அந்த அறையில் வைத்துதான் டேவிட் மைக்கேல், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை ஆசிரியர் ஒருவர் மறைந்திருந்து நேரில் பார்த்துவிட்டார். இதனையடுத்து, அவர் நடந்த சம்பவம் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால், தலைமை ஆசிரியர், கணினி ஆசிரியர் டேவிட் மைக்கேலை தனியாக அழைத்து விசாரித்துள்ளார்.

இதையும் படிங்க: காந்தியை மன்னிக்கவே மாட்டேன்.. கமல்ஹாசன் பேச்சால் மீண்டும் பரபரப்பு!

மேலும், மாணவிகளையும் தனியாக அழைத்து தலைமை ஆசிரியர் விசாரித்துள்ளார். இதனிடையே, தான் சிக்கிக் கொண்டதை அறிந்த டேவிட் மைக்கேல் தலைமறைவானார். மேலும், இது குறித்து அந்த மூன்று மாணவிகளும் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர், உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், டேவிட் மைக்கேல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, போலீசார் தலைமறைவாக இருந்த டேவிட் மைக்கேலை, கன்னியாகுமரியில் வைத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியர் டேவிட் மைக்கேல் சிறையில் அடைக்கப்பட்டார்.

  • Bharathiraja son Manoj death இறந்த பின்பும் இப்படியா..மனோஜ் சவப்பெட்டி மீது நடந்த மோசமான செயல்..பிரபலம் காட்டம்.!