இப்போ இறங்குறியா..? இல்ல தூக்கி எறியட்டுமா.. இசைக் கருவிகளுடன் நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டர்.. பரிதவித்த மாணவி..!!

Author: Babu Lakshmanan
11 May 2023, 10:01 am

நெல்லை ; கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு கொண்டு வந்த பறை இசை கருவிகளை எடுத்துச் சென்ற மாணவியை, பேருந்தில் இடமில்லை எனக் கூறி இசைக்கருவிகளுடன் பாதியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதா. நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார். கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக தனது ஊரான சிவகங்கையில் இருந்து பறை இசை கருவிகளை கல்லூரிக்கு கொண்டு வந்துள்ளார். அப்போது அரசு பேருந்தில் தான் வந்துள்ளார். கல்லூரியிலும் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக முடிந்துள்ளது.

அதனை தொடர்ந்து, மாலையில் சொந்த ஊருக்கு பறையிசை கருவிகளை கொண்டு செல்வதற்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் மதுரை செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்தில் ஓட்டுநர் அனுமதித்தாலும், பேருந்து பயணித்துக் கொண்டிருக்கும் போது டிக்கெட் கேட்க வந்த நடத்துனர், மாணவியை தவறாக பேசி பறை இசை கருவிக்கு பேருந்தில் இடமில்லை எனக்கூறி பாதி வழியில் இறங்கச் சொல்லி உள்ளார்.

உடன் வந்த மற்ற பயணிகள் வற்புறுத்தல் காரணமாக பறை இசைக்கருவிகளுடன் சேர்த்து மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு சென்றுள்ளார் நடத்துனர்.

பாதி வழியில் இறங்கி நின்று தனியாக அழுது கொண்டிருந்த மாணவியின் நிலை பரிதாபகரமாக இருந்தது. உடனடியாக மாணவி நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போக்குவரத்து கழக அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் மாணவியை ஏற்றிச் செல்ல பேருந்துகள் எதுவும் வரவில்லை. அரை மணி நேரத்திற்கும் மேலாக வந்த பேருந்துகளை ஒவ்வொன்றாக நிறுத்தி மனைவியை பேருந்து ஏற்றி விட முயற்சித்த செய்தியாளர்களின் முயற்சி இறுதியாக பலித்தது.

நெல்லையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற அரசு பேருந்து நடத்துனர் பாஸ்கர், செய்தியாளர்களின் மூலம் மாணவியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு மதுரையில் மாணவியை குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விடுவதாக கூறி கொண்டு வந்த பறை இசை கருவிகளுடன் மாணவியை பேருந்தில் ஏற்றிச் சென்றார்.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!