கசந்து போன காதல்.. சைக்கோ என கூறி நிராகரித்த காதலி : நியாயம் கேட்க வீட்டிற்கு சென்ற காதலனுக்கு நேர்ந்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 April 2023, 9:52 pm

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் 25-வயது இஞ்சினியரான ஆனி ரெனிஷா என்பவரும் கடந்த 8-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் கல்லூரி செல்லும் போது இருவரும் இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிவதோடு ஷாப்பிங்,டேட்டிங், என பல்வேறு ஊர்களுக்கும் சென்று வந்துள்ளனர் ஜெபின் காதலிக்கு விலையுயர்ந்து பொருட்களை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார்

ஒரு கட்டத்தில் இன்ப சுற்றுலா செல்லும் இவர்கள் தமிழகம், கேரளா, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

கழிந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜெபின் வேலைக்காக வெளிநாடு சென்ற நிலையில் ஆனி ரெனிஷா வும் தக்கலையில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்

இருவரும் இரவு நேரங்களில் வீடியோ காலில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்த நிலையில், ஐ .டி. கம்பெனிக்கு வேலைக்கு சென்று வரும் ஆனி ரெனிஷா சக நண்பர்களுடன் ஊர் சுற்ற ஆரம்பித்துள்ளார்.

இதை அறிந்து ஜெபின் அவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ஆனி ரெனிஷா ஜெபினுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஜெபின் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் வேலையை விட்டு வெளிநாட்டில் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

சொந்த ஊருக்கு திரும்பி ஜெபின் ஆனி ரெனிஷா வீட்டிற்கு உறவினர்களை அனுப்பி பெண் கேட்டுள்ளார். ஆனால் அவரின் பெற்றோர் பெண் கொடுக்க சம்மதிக்காமல் உறவினர்களை திருப்பி அனுப்பிய நிலையில், ஆனி ரெனிஷா ஜெபினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீ ஒரு சைக்கோ உன்னுடன் குடும்பம் நடத்த முடியாது என்னை மறந்து விடு எனது வீட்டிற்கு பெண் கேட்டு யாரையும் அனுப்பாதே என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்து விரக்தியின் உச்சத்திற்கு சென்ற ஜெபின் இன்று காதலியின் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் காதலியுடன் சேர்ந்து செல்போனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி நியாயம் கேட்டதோடு அவரை வெளியே வருமாறு அழைத்து வீட்டின் முன்பக்க கேட்டை திறந்து உள்ளே சென்று அடாவடியில் ஈடுபட்டார்

தட்டி கேட்ட ஒருவரிடம் என்னை சைக்கோ என்கிறாள், அப்பா தூங்கிட்டாங்க என இரவு 11-மணிக்கு வீட்டிற்கு அழைத்தவர்,என காதலிக்கும் போது நடந்ததையெல்லாம் ஒப்பித்துள்ளார்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து செல்ல முற்பட்ட போது, ஆனி ரெனிஷா தரப்பில் வந்த வழக்கறிஞர் ஒருவர் ஜெபின் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

ஒரு கட்டத்தில் ஜெபினை போலீசார் தக்கலை காவல் நிலையம் அழைத்து சென்ற நிலையில் இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆனி ரெனிஷா காதலனை ஏற்க மறுத்த நிலையில் அவரின் தந்தை விஜயராஜ் தக்கலை காவல் நிலையத்தில் ஒரு புகாரளித்தார்.

அதில் எனது மகள் ஆனி ரெனிஷா வை ஜெபின் காதலித்து வந்ததாகவும் தற்போது இருவரும் போசுவதை நிறுத்திய நிலையில் இன்று எனது வீட்டிற்கு வந்த ஜெபின் வீட்டின் கேட்டை திறந்து அத்துமீறி நுழைந்து எனது மகள் ஆனி ரெனிஷாவை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லை என்றால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரளித்தார்.

இதனையடுத்து ஜெபின் மீது ஆபாச படங்களை பொது வெளியில் அத்துமீறி வீட்டில் நுழைவது கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் ஜெபின் ஐ கைது செய்து தக்கலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சைக்கோ என கூறி கழற்றி விட்ட காதலியின் வீட்டிற்கு ஆவேசமாக சென்று நியாயம் கேட்டு இஞ்சினியர் வேலையையும் பணத்தையும் இழந்து சிறையில் சென்று கம்பி எண்ணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith praise adhik ravichandran after watching good bad ugly movie என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?