பிரதமர் மோடிக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம்… வழக்கறிஞர் நந்தினி உள்பட இருவரிடம் பாஜகவினர் வாக்குவாதம் ; போலீசாரால் கைது..!

Author: Babu Lakshmanan
7 September 2022, 1:01 pm

திண்டுக்கல் ; பிரதமர் மோடிக்கு எதிராக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் துண்டு பிரச்சாரம் செய்த வழக்கறிஞர் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் போலீசாரால் கைது செய்தனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இன்று மாலை மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகிய இருவரும் பேருந்து பயணிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர்.

அதில், பிரதமர் மோடி தனது நண்பர்களுக்காக வங்கியில் மூலம் தள்ளுபடி செய்யப்பட்ட 10.72 லட்சம் கோடி பணத்தை மீண்டும் வசூல் செய்து, வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும், என கையில் பதாகை ஏந்தி துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நபர்கள் துண்டு பிரசுரம் செய்த நந்தினி மற்றும் நிரஞ்சனாவிடம் துண்டு பிரசுரம் செய்யக்கூடாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், பாரதிய ஜனதா கட்சியினர் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிக மக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் வழக்கறிஞர் நந்தினி மற்றும் நிரஞ்சனா பிரதமர் மோடி பற்றி பிரச்சாரம் செய்தது இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!