காட்டுக்குள் கட்டிப்புரண்ட மாணவிகள்… சிக்காத காதலன் : அதிர்ந்து போன மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2023, 7:21 pm

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணாபுரத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 12-ம்வகுப்பு வரை உள்ளது. மொத்தம் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று மாலை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் காட்டுப்பகுதியில், அந்த பள்ளி மாணவிகள் ஒன்றாக திடீரென திரண்டனர்.

30-க்கும் மேற்பட்ட மாணவிகள், காட்டுப்பகுதியில் ஒன்றாக திரண்டதுடன், ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கினர்.

ஒருவரை பார்த்து இன்னொருவர் ஆபாசமாகவும், அசிங்கமாகவும் திட்டிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர்.

பள்ளி மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வதை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதற்காக இவர்கள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள் என்றும் புரியாமல் விழித்தனர்.

இதனால், அந்த பகுதி மக்கள், விரைந்து வந்து, மோதலை தடுத்து நிறுத்த முயன்றும், ஆவேசமாக காணப்பட்ட மாணவிகளை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.

பிறகு, பொதுமக்களே பெரும் முயற்சிக்கு பின் அவர்களை அமைதிப்படுத்தினர். மாணவிகளிடம் மோதலுக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இது ஒரு காதல் விவகாரம் என்பதே தெரியவந்தது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவி, மாணவன் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால், அந்த மாணவனுக்கு இன்னொரு மாணவி, வாட்ஸ் அப் மூலம் பல்வேறு மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார்.. அதே மாணவனுடன் நிறைய நேரம் சாட்டிங்கிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த விஷயம் மாணவணை காதலிக்கும் அந்த பெண்ணுக்கு தெரிந்துவிட்டது. அதனால், சக மாணவியிடம் இதை பற்றி கேட்டுள்ளார்.

தான் காதலிக்கும் மாணவனுடன் சாட்டிங்கில் எப்படி ஈடுபடலாம்? என்று தட்டிக்கேட்டுள்ளார். இதுதான் இவர்களுக்குள் தகராறாக உருவெடுக்க காரணமாகி உள்ளது.

இதற்கு முன்புகூட, இது தொடர்பாக பெரிய சண்டை வந்துள்ளது.. அவர்களுக்குள் அடிக்கடி தகராறு வரை சென்றிருக்கிறது.. ஆனாலும், எந்த முடிவும் இந்த காதல் விவகாரத்தில் எட்டப்படவில்லை.

ஒரு மாணவனுக்காக 2 பெண்கள் அடித்துக் கொள்ளும் விவகாரம் இவர்களின் மற்ற தோழிகளுக்கும் தெரியுமாம். அதனால், இந்த விஷயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சக தோழிகளை, இந்த 2 பெண்களும் கேட்டுக் கொண்டனர்.

அதற்காக, நேற்று மநைல பள்ளி முடிந்ததுமே, இந்த பிரச்சினை தொடர்பாக பேசி தீர்த்து கொள்வதற்காக 2 மாணவிகளும், தங்களுடன் படிக்கும் தோழிகளை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு இரு தரப்பு மாணவிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சுமூக முடிவு ஏற்படாமல், 2 தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிப்போய், இரு தரப்பு மாணவிகளும் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டு கட்டிப்புரண்டுள்ளனர்.

அதற்கு பிறகுதான் பொதுமக்கள் உடனே இதனை பார்த்து தடுத்து நிறுத்தியுள்ளனர். பிறகு, இந்த சம்பவம் ஸ்கூல் வரை கொண்டு செல்லப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியர் இதை கேள்விப்பட்டு அதிர்ந்துபோனார். இரு தரப்பு மாணவிகளிடமும் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்.

காதலனுக்காக பள்ளி மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி