₹20,000 கொடுங்க..கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? ஸ்கேன் சென்டருக்கே ஷாக் கொடுத்த சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2024, 9:28 am

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் பகுதியானது வனப்பகுதியை ஒட்டிய பகுதியாகும்,இந்த பகுதியில் ஒரு மர்ம கும்பல் இரவு நேரத்தில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ,தர்மபுரி ஊரக நலத்துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி தலைமையிலான குழுவினர், திடீரென அப்பகுதியில் இரவு நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.

அப்போது,மகேந்திரமங்கலம் காவல் நிலையம் அருகில் சீங்கேரி கூட்ரோட்டில் உள்ள கார்த்தி என்பவரது (ஓட்டல்+வீடு) வீட்டில், 2 கர்பிணி பெண்களிடம் தலா ரூ.20,000 பணம் வசூல் செய்து, சட்டவிரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பலை சேர்ந்த இடைத்தரகர் வடிவேல், ஸ்கேன் செய்யும் கற்பகம் என்பவரை, ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் பிடித்தனர்.

மேலும் இடைத்தரகர்கள் திருமலை (40),ஜோதி (35) (பெண்) இருவரும் தப்பித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து பாலினம் கண்டறியும் இயந்திரம், பணம் ரூபாய் 18,000 பறிமுதல் செய்து, மகேந்திரமங்கலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் இந்த கற்பகம் என்பவர் தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஆக பணியாற்றி வந்து தொடர்ந்து இது போன்ற சட்டவிராத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு காரிமங்கலம் பகுதியில் கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 301

    0

    0