எப்படி கொடுத்தாலும் அப்படியே திருப்பிக் கொடுங்க.. நான் இருக்கேன் : பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!!!
Author: Udayachandran RadhaKrishnan3 June 2023, 9:16 pm
தமிழக பாஜக வட்டாரங்கள் கூறும் தகவல் தமிழக அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, பா.ஜ.க தொண்டர்கள் தங்கள் பகுதியில் கொடி கம்பம் நடுவதுடன், தலைவர்களின் படங்களை திறக்கின்றனர். அதை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க., – வி.சி.க., மற்றும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக உள்ள சில அமைப்புகளை சேர்ந்த நபர்கள், பா.ஜ.க, கொடி கம்பத்தை சேதப்படுத்துவதுடன், பேனர்களை கிழிக்கின்றனர்.
பொதுக்கூட்டம், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்க்கும் நிகழ்ச்சி, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு போன்றவற்றின் போது வேண்டுமென்றே இடையூறு செய்கின்றனர்.
தட்டி கேட்க செல்லும் பா.ஜ.க தொண்டர்களை தாக்குகின்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. போலீசார் முன்னிலையில் பா.ஜ.க தொண்டர்களை தாக்க முயல்கின்றனர்.
எனவே, மாற்று கட்சியினர் வேண்டும் என்றே தகராறு செய்யும் போது, அவர்கள் என்ன மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனரோ அதே பாணியில் பதிலடி கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு, கட்சி அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் என கட்சி நிர்வாகிகளிடம் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.