எனக்கு ஒரு பதவி கொடுங்க : போட்டி போட்டு மனுக்களை அளிக்க குவிந்த திமுக நிர்வாகிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2022, 9:54 pm

திருவள்ளூர் அருகே ஆளும் கட்சியான திமுகவில் பல்வேறு பதவிகளைப் பெற போட்டி போட்டு கொண்டு மனுக்களை அளிக்க குவிந்த கட்சியினர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக கழகம் சார்பில் கழக சார்பு அணிகளுக்கான மாவட்ட அமைப்பாளர் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்குதல் மற்றும் திரும்ப பெறுதல் நிகழ்ச்சி புதுவாயலில் நடைபெற்றது.

இதில் ஆளும் கட்சியில் இலக்கிய அணி, வர்த்தக அணி, விவசாய அணி, மீனவர் அணி வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பதவிகளைப் பெற குவிந்த கட்சி தொண்டர்கள் போட்டி போட்டு கொண்டு மாவட்ட கழக செயலாளர் டி.ஜே கோவிந்தராஜனிடம் மனுக்களை அளித்தனர்.

தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் சூழல் உருவாகியுள்ள நிலையில் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் கட்சிப் பதவிகளை பெறுவதில் கட்சியினர் மும்முரம் காட்டினர்..

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி