குற்றால வெள்ளத்தில் சிக்கி பலியான வ.உ.சி கொள்ளுப் பேரன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குக : சரத்குமார் வலியுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2024, 8:49 pm

குற்றால வெள்ளத்தில் சிக்கி பலியான வ.உ.சி கொள்ளுப் பேரன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குக : சரத்குமார் வலியுறுத்தல்!

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் கடந்த 17ஆம் தேதி பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அப்போது, அருவியில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர். இருப்பினும், வெள்ளப்பெருக்கில் அஸ்வின் என்ற சிறுவன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

தொடர்ந்து, கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த அஸ்வின், சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழனுமான வஉசியின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியானது.

அதே நேரத்தில் சிறுவன் அஸ்வின் இறந்த சோகத்தில் அவரது குடும்பத்தினர் இருப்பதால் இதுகுறித்து பேச அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும் வீட்டுக்கு வேறு யாரும் வர வேண்டாம் எனவும் கூறப்பட்டது.

இந்த தகவல் உண்மையே, அஸ்வின் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது விடுமுறை என்பதால் தென்காசியில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் அஸ்வின், சுதந்திர போராட்ட வீரும் கப்பலோட்டிய தமிழனுமான வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்தி ஆறுமுகச் செல்வியின் அக்கா செண்பகவள்ளியின் பேரன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: இந்திய மாணவர்கள் 3 பேர் பலி.. அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழும் சோகம்..!!

இதனிடையே தென்காசி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், நடிகருமான சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு துர்திஷ்டவசமாக 17 வயது சிறுவன் அஸ்வின் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. அச்சிறுவன் சுதந்திர போராட்ட வீரரான வ.உ.சிதம்பரனாரின் வாரிசு என்ற செய்தி மேலும் வருத்தமளிக்கிறது. அச்சிறுவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!