ரூ.15 ஆயிரம் கொடுங்க… விவசாயிக்கு ஷாக் கொடுத்த சர்வேயர் : நோட்டமிட்ட அதிகாரிகள்.. கூண்டோடு சிக்கிய 2 பேர்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2023, 10:03 pm

நில அளவீடு செய்து வரைபடம் வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த டி.பி.பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலு என்பவர் தனது நிலத்தை அளவீடு செய்து வரைபடம் வழங்க வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இதனிடையே நிலத்தை அளவீடு செய்து வரைபடம் வழங்க வட்டார துணை நில அளவிட்டார் (சர்வேயர்) 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனிடைய வேலு இது குறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வேலு நில அளவிட்டாலர் விஜய் கிருஷ்ணனிடம் பணம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் நில சர்வேயர் விஜய கிருஷ்ணனுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கலைவாணன் ( 27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 15,000 ருபாய் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் லஞ்சம் வாங்கி போலீசில் சிக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 689

    0

    0