காங்., அதிமுக போட்ட பிச்சை.. ஜிகே வாசன் துரோகம் செஞ்சுட்டாரு : த.மா.காவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி கருத்து!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2024, 8:14 pm

காங்., அதிமுக போட்ட பிச்சை.. ஜிகே வாசன் துரோகம் செஞ்சுட்டாரு : த.மா.காவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி கருத்து!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த கதிர்வேல் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளதாக கடந்த இரண்டு தினங்களுக்கு மூலம் கட்சியின் தலைவர் ஜிகே வாசனுக்கு கடிதம் மூலம் அனுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆரம்ப காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் சுமார் 50ஆண்டுகளாக பயணித்து பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கிய பின்பு ஜிகே வாசனுடன் அரசியலில் பயணித்து வந்தேன். மேலும் நான் INTUC தொழிற்சங்கங்களுக்கு தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக இருந்து வருகின்றேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினை பொறுத்தவரை-யில் தோற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.

கடந்த காலங்களில் மத்திய அமைச்சர் பதவி கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் மேல் சபை எம்பி பதவி கொடுத்த அதிமுக விற்கு துரோகம் என அவரை உயர்த்தி பதவி கொடுத்த கட்சிகளுக்கு துரோகம் செய்தவர் ஜிகே வாசன் இப்போது பாரதிய ஜனதா கட்சியிடம் கூட்டணி வைத்துள்ளார் இங்கு சீட் வாங்கி அதனை அதிக விலைக்கு விற்று வருகின்றார்.

கடந்த 2016-ம் ஆண்டு மக்கள் நல கூட்டணி-யில் பயனித்தபோது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தரப்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் நின்றேன் அப்போது அந்த கூட்டணியில் அதிக வாக்குகள் பெற்றது நான்தான் சுமார் 20-ஆயிரம் வாக்குகள் அந்த தொகுதியில் வாங்கினேன் அதனடிப்படையில் தற்போது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சீட் கேட்டேன் ஆனால் அவர் தரவில்லை என்னைவிட கூடுதலாக கேட்டவருக்கு சீட்டை விற்றுவிட்டார் இதனால் நான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டேன் விலகிதற்கான காரணங்கள் குறித்து தபால் மூலம் தலைமைக்கு தெரியபடுத்தியது மட்டுமன்றி தொலைபேசி மூலமாகவும் ஜிகே வாசனிடம் கட்சியில் பயணிக்க விருப்பம் இல்லை விலகி கொள்கின்றேன் என கூறிவிட்டேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசனை பொறுத்தவரையில் கூட்டணி கட்சிகளுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் கதிர்வேல் முன்வைத்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ