கடந்த 19 மாதங்களாக திமுக அரசு தமிழக மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்றும், ஆகவே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாஷமாக உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், எஸ்டிஆர் கல்வி நிறுவனங்களின் தலைவருமான எஸ்டிஆர் விஜயசீலன் 50வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தூத்துக்குடி, கோரம்பள்ளம் எஸ்டிஆர் பள்ளி வளாகத்தில் எஸ்டிஆர் விஜயசிலனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.
பிறந்த நாளை குறிக்கும் வகையில் 50 அடி நீளம் உள்ள கேக்கை ஜிகே வாசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குடும்பத்தினர் முன்னிலையில், எஸ்டிஆர் விஜயசிலன் வெட்டினார். ஏழை, எளிய மக்களுக்கு தையல் மிஷின்கள் சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஜிகே வாசன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி .கே வாசன் கூறியதாவது :- அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வேட்பாளர் அறிமுகப்படுத்த கூடிய மாபெரும் பொது கூட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது.
கூட்டத்தில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் வேட்பாளர் வெற்றியை உறுதி செய்ய கூடிய கூட்டமாக இருக்கும் என முழுமையாக நம்புகிறேன். அங்கு கடந்த 10 நாட்களாக களத்திலே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக தங்களுடைய பணியை செய்து கொண்டிருக்கிறது. அங்கு வெற்றி பிரகாஷமாக உள்ளது. வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த அரசாக திமுக செயல்பட்டு கொண்டிருப்பதாக வாக்காளர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.
டெல்டா மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பெய்து சீர்காழி பகுதி பெருத்த அளவில் பாதிக்கப்பட்டது. நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். அப்போது கூட தமிழக அரசு விவசாயி எண்ணங்களை முழுமையாக அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய தவறியது.
டெல்டா மாவட்டத்தில் நான்கு மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏக்கர் 35,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம் அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை.
நிலங்களை சென்று பார்க்க அதிகாரிகளை முறையாக அனுப்புவது கிடையாது. எனவே விவசாயிகள் வஞ்சிக்கும் செயலை தருவது வருத்தம் தருகிறது. கடந்த 19 மாதங்களாக திமுக அரசு தமிழக மக்களுக்கும் எந்தவித நல்ல திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்பதால் தமிழக மக்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இடைத்தேர்தலில் கூட்டணியின் முதன்மை கட்சி என்ற அடிப்படையிலும் வெற்றிக்கு வாய்ப்புள்ள இயக்கம் என்ற அடிப்படையிலேயே அதிமுக போட்டியிட முடிவெடுக்கப்பட்டது.
தமிழக அரசு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத திட்டங்களை செயல்படுத்தும் என நம்புவதாகவும் அவர் கூறினார். பேட்டியின் போது, தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர் விஜயசீலன் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.