வழக்கத்திற்கு மாறாக ஒரே நேரத்தில் 5 குட்டிகளை ஈன்ற ஆடு : அதிசயத்தில் உறைந்த கிராம மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2023, 12:49 pm

வழக்கத்திற்கு மாறாக ஒரே நேரத்தில் 5 குட்டிகளை ஈன்ற ஆடு : அதிசயத்தில் உறைந்த கிராம மக்கள்!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கன் மனைவி சரசு. இவர் விவசாயம் செய்து வருவதோடு சில ஆடுகளையும் வளர்த்து வருகிறார்.

பொதுவாக ஆடு இரண்டு அல்லது மூன்று குட்டிகளை மட்டுமே‌ ஈனும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக சரசுவின் ஆடானது 4 கிடாய் குட்டிகள்(ஆண்குட்டி) மற்றும் ஒரு பிருவை(பெண்குட்டி) குட்டியுடன் சேர்த்து மொத்தம் ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது.

அந்த ஐந்து ஆட்டுக்குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளன. அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். ஒர் ஆடானது ஐந்து குட்டிகளை ஈன்றது ஆச்சரியத்தை இப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!