#GoBackUdhayanidhi.. அமைச்சர் உதயநிதிக்கு எதிராக அவதூறு பரப்பிய பாஜக மாவட்ட செயலாளர் அதிரடி கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2023, 9:41 am

GoBackUdhayanidhi.. ட்விட்டரில் உதயநிதிக்கு எதிராக பதிவிட்ட பாஜக மாவட்ட செயலாளர் அதிரடி கைது!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திமுகவினர் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு கிருஷ்ணகிரி வந்தடைந்த அவரை கோ பேக் உதயநிதி ஸ்டாலின் என்ற வாசகங்கள் உடன் சமூக வலைதளங்களில் பாஜக மாவட்ட தலைவர் எம்.சி.முருகேசன் என்பவர் பகிர்ந்ததாக தெரிகிறது.

இது குறித்து திமுகவினர் பாஜக பிரமுகரின் மீது பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த சமூக வலைத்தளங்களில் பரப்பியவர் பர்கூர் அடுத்த BRG.மாதேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த எம்சி.முருகேசன் என்பதும் அவர் மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருவதும் தெரிய வந்தது.

பின்னர் அவரை பர்கூர் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த பாஜக மாவட்ட தலைவர் சிவ பிரகாஷ் மாவட்ட பொருளாளர் கவியரசு மற்றும் பாஜக நிர்வாகிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பர்கூர் காவல் நிலையத்தில் குவிந்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட முருகேசன் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் பாஜகவினர் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

  • vasanthabalan apologize for the character portrayed in his veyil movie வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…