இந்த பிரச்சனைக்கு முடிவே இல்லையா..? எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க.. டிடி உருக்கம்..!

Author: Vignesh
1 October 2022, 11:00 am

நடிகை குஷ்புவின் அவினி சினிமேக்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி. இயக்கத்தில் நடிகர் ஜீவா, மாளவிகா சர்மா, யோகிபாபு, டிடி நடிப்பில் உருவாகி இருக்கும் காபி வித் காதல். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் அக்டோபர் 7ம் தேதி வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் டிடி கலந்து கொண்டார்.

ரசிகர்கள் மனதில் டிடி சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நடித்து ஆங்கராக மட்டுமில்லாமல் ஒரு நடிகையாகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் டிடி. சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் காபி வித் காதல் திரைப்படத்திலும் டிடி நடித்துள்ளார்.

சமீப காலமாக எங்கு சென்றாலும் வீல் சேரில் சென்று கொண்டிருக்கிறார் டி டி. காபி வித் காதல் படத்தின் ப்ரோமோஷனுக்கும் வீல் சாரிலேயே வந்து கலந்து கொண்டார் டிடி.

இதுகுறித்து டி டி கூறியதாவது:-

இயக்குநர் சுந்தர்.சி உடன் பணிபுரிந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தில் நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டது என்னவென்றால், அவருடைய திறமை, அறிவு போன்றவை தான்.

நான் எப்பொழுதும் டான்ஸர் தான். டிவியில் ஆடிக்கொண்டே தான் இருந்தேன். எனக்கு காலில் கொஞ்சம் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனைக்கு முடிவே இல்லை போல.. அவ்வப்பொழுது பிரச்சனைகள் வரும். பிறகு காணாமல் போய் விடும். காபி வித் காதல் திரைப்படத்தில் நடித்துள்ளேன். டிவியில் இருக்கும்பொழுது ஆதரவு தந்தது போல், சினிமாத்துறையிலும் ஆதரவு தர வேண்டுகிறேன்.

எனக்கு அமைந்தது மிகப்பெரிய சந்தோஷம். நான் ரொம்ப லக்கி கேர்ள். எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க, எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் கடவுள் எனக்கு உடன் இருந்து உதவி செய்கிறார் என்றார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி