கடவுள் ராமருக்கு பிடித்த மாட்டு பிரியாணி.. முகநூலில் பதிவிட்ட திமுக பிரமுகர் : படையெடுத்த பாஜகவினர்!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2024, 4:05 pm

கடவுள் ராமருக்கு பிடித்த மாட்டு பிரியாணி.. முகநூலில் பதிவிட்ட திமுக பிரமுகர் : படையெடுத்த பாஜகவினர்!

அயோத்தியில் நேற்று ராமர் கோவில் பிரதமர் மோடி தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது,இதில் ஏராளமான பிரபலங்கள் மற்றும் சாதுக்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் தி.மு.க. மற்றும் பாஜகவினருக்கு மோதல் முற்றி வருகிறது,இந்நிலையில் தி.மு.க. சட்ட சீர்திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் அவரது முகநூலில் ராமருக்கு பிடித்தது மாட்டுக் கறி பிரியாணி என பதிவு செய்திருந்தது பொள்ளாச்சி நகர பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

பாஜக நகர தலைவர்பரமகுரு தலைமையில் தென்றல் செல்வராஜ் வீட்டை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்த தி.மு.க.வினர் வர தொடங்கினர்.

வீட்டில் உள்ளே இருந்த தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறன் மற்றும் பாஜகவினருக்கு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பாஜகவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அனுமதி இல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக”வினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ராமருக்கு மாட்டுக்கறி பிரியாணி முகநூல் பதிவு சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 479

    0

    0