கோவில்களின் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு கச்சி அநேக தங்காவதீஸ்வரர் திருக்கோவில்.1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது. தேவாரம் பாடல் பெற்ற தலம் இது.
இன்று காலை அநேக தங்காவதீஸ்வரர் கோவிலில் பூட்டை உடைத்து உற்சவர் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.இன்று அதிகாலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள், கோவிலின் மூலஸ்தானத்தில் இருந்த சுவாமி சிலைகளை காணாமல் திடுக்கிட்டனர்.ஒன்றரை அடி உயரமுள்ள சிவன் மற்றும் பார்வதி சிலைகள் திருடு போயிருந்தன.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில் 20 கிலோ எடையுள்ள செம்பு குடம், பித்தளை பாத்திரங்களையும் காணவில்லை என தெரிய வந்தது. மேலும் உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது.
நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள், சுவாமி சிலைகளை திருடி, உண்டியலை உடைத்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆதிக் ரவிச்சந்திரனின் கனவு அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால்,தற்போது அனைவரும் அஜித்தின்…
நடிகர் விஜய் BEDROOMக்குள் புகுந்து பிரபலம் செய்த செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக…
நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது நாதகவுக்கு களையுதிர் காலம் என…
வீல் சேரில் லூட்டி அடித்த ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா,இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த…
கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆர்டர் செய்த சூப்பில் பூச்சிகள் மிதந்ததற்கு உணவகம் தரப்பில் அலட்சியமாக பதில் தரப்பட்டதாக புகார்…
This website uses cookies.