கோவையில் அதிசயத்தில் ஆழ்த்திய அம்மன் சிலை : கண் திறந்ததாக கூறி அலைமோதிய பக்தர்கள் பக்திப் பரவசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2022, 8:35 pm

கோவை : திடீரென கண் திறக்கப்பட்டு காட்சியளித்த அம்மன் சிலையால் பக்தர்கள் பக்தி பரவசத்தில் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காமராஜபுரம் ஹவுசிங் காலனி பகுதியில் அருள்மிகு தேவிஸ்ரீ பூமாரிய்யம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 40ஆண்டுகால பழமை வாய்ந்த அம்மனுக்கு இரண்டு நாட்களுக்கு முன் கோவில் புனரமைப்பு பணிக்காக கணபதி ஹோமம் நடைபெற்றுள்ளது.

தினந்தோறும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை என்பதால் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பூமாரியம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடு செய்துள்ளார்.

திடீரென கண் திறக்கப்பட்டு காட்சியளித்துள்ளார் அம்மன். இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் அம்மனை தரிசிக்க குவிந்தனர். திடீரென மாரியம்மன் கண் திறக்கப்பட்டதினால் பக்தர்களிடையே பரவசத்தில் ஆழ்த்தியது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!