சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளி என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு கோகுல்ராஜின் தாயார் கண்ணீர்மல்க வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் தலைமறைவாக இருந்தார்.
இந்த நிலையில், இவ்வழக்கினை கோகுல்ராஜ் தாய் சித்ரா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நாமக்கல் நீதிமன்றத்திலிருந்து, மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி சம்பத்குமாா் இன்று தீர்ப்பளித்தார். அப்போது யுவராஜ் உள்ளிட்ட 15 பேர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் அருண், குமார் மற்றும் சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேர் குற்றவாளியாகவும், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார் தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார். குற்றவாளிகள் 10 பேருக்குமான தண்டனை விபரம் வரும் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த போது வழக்கில் தொடர்புடைய ஜோதிமணி என்ற பெண் உயிரிழந்த நிலையில், தலைமறைவாக இருந்த அமுதரசு என்பவரின் மீதான வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
இதனிடையே, 10 பேரை குற்றவாளியாக அறிவித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய கோகுல்ராஜின் தாயார் சித்ரா, இந்த தீர்ப்புக்காக உயிரோடு காத்திருந்ததாகவும், 10 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…
'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…
ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…
இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…
சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…
This website uses cookies.