சென்னையில் இன்று (ஜன.04) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் எனக் கூறிக்கொண்டு, தங்கம் விலை 1ஆம் தேதி முதலே அதிகரிக்கத் தொடங்கி மக்களுக்கு ஆட்டம் காண்பித்தது. முன்னதாக, 2024ஆம் ஆண்டின் முடிவில் குறைந்து காணப்பட்ட தங்கம் விலை, புத்தாண்டை வரவேற்கும் விதமாக, குறைந்த வேகத்தில் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது.
இந்த நிலையில், இன்று புத்தாண்டு தொடங்கியது முதல் முதன் முறையாக குறைந்துள்ளது. இதன்படி, இன்று (ஜன.04) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 215 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 360 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 871 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 968 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் குறைந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.