இதோ ஆரம்பம்.. மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை!

Author: Hariharasudhan
17 December 2024, 10:25 am

சென்னையில் இன்று (டிச.17) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: முருகன், ஐயப்பன் விரதம் மாதம் என அழைக்கப்படும் கார்த்திகை மாதம் முடிவுற்ற நிலையிலும், தங்கம் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்தே வந்தது. இதனிடையே, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமலும் இருந்து வந்தது. ஆனால், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து உள்ளது.

Silver price today

இதன்படி, இன்று (டிச.17) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: கைதுலாம் சும்மா.. அசால்ட்டு காட்டும் அல்லு அர்ஜுன்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 799 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 392 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் ஏதும் இல்லாமல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Madha Gaja Raja box office collection வசூல் ராஜாவாக மாறிய விஷால்…மதகதராஜா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..!