ரூ.68 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு!

Author: Hariharasudhan
31 March 2025, 10:40 am

சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு 8 ஆயிரத்து 400 ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் 67 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Gold rate today

அந்த வகையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, இன்று (மார்ச் 31) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 520 ரூபாய் அதிகரித்து 67 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 9 ஆயிரத்து 190 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 73 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 113 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Leave a Reply

    Close menu