இத நாங்க எதிர்பார்க்கவே இல்ல.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
Author: Hariharasudhan14 November 2024, 10:28 am
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 110 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 935 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சென்னை: நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலை அடுத்த 2 நாட்கள் தங்கம் விலை குறைந்தது. ஆனால், அதற்கு அடுத்த நாளில் திடீரென தங்கம் விலை அதிகரித்தது. பின்னர், கடந்த சில நாட்களாக குறைந்தது 50 ரூபாய்க்கு மேல் குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது.
இதன்படி, இன்று (நவ.14) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 110 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 935 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 55 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் சோதனையில் லாட்டரி மார்ட்டின்.. விசிக பிரமுகர் வீட்டிலும் சோதனை!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 59 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் குறைந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.