சும்மா ஜாலிக்கு.. மீண்டும் உயரும் தங்கம் விலை!

Author: Hariharasudhan
15 November 2024, 10:28 am

சென்னையில் தங்கம் மீண்டும் உயரத் தொடங்கி உள்ள்ளது. இதன்படி ஒரு கிராம் ரூ.6,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலை அடுத்த சில நாட்கள் தங்கம் சரிவைச் சந்தித்தது. ஆனால், அடுத்த சில நாட்கள் 100 ரூபாய்க்கு மேல் விலை அதிகரித்து நகைப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்தது. இருப்பினும், நேற்று வரை எண்ணிப் பார்க்க முடியாத வரை தங்கம் விலை குறைந்தது.

SILVER BSCUIT

இந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கி உள்ளது. இதன்படி, இன்று (நவ.15) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 945 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 55 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: இனி ‘அந்த’ திட்டத்தை பற்றி CM எதுவுமே பேசக்கூடாது.. ஹெச் ராஜா திடீர் எச்சரிக்கை!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 59 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றமில்லாமல் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!