சென்னையில் இன்று (டிச.16) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் மாற்றம் ஏதும் இல்லாமல் 7 ஆயிரத்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: விரதம் மாதம் என அழைக்கப்படும் கார்த்திகை மாதம், தொடர்ச்சியான சுபமுகூர்த்த நாட்களால் தங்கம் விலை கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறையத் தொடங்கியது. அந்த வகையில், இன்றுதொட்டு கடந்த 3 நாட்களும் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.
இதன்படி, இன்று (டிச.16) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் மாற்றம் ஏதும் இல்லாமல் 7 ஆயிரத்து 140 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 57 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: இயக்குனர் சிவாவை டார்ச்சர் செய்த நயன்தாரா:பிஸ்மி சொன்ன தகவல்… பரபரப்பில் கோலிவுட்..!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 789 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 312 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.