கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.. அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
Author: Hariharasudhan18 November 2024, 10:15 am
சென்னையில் இன்று (நவ.18) ஒரு கிராம் தங்கம் 60 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 995 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலை அடுத்து, சரிவைச் சந்தித்த தங்கம் விலை, மீண்டும் உயரத் தொடங்கியது. ஆனால், கடந்த வாரம் தங்க நகைப் பிரியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டமாக, விலை குறைவாகவே காணப்பட்டது. சவரனும் 56 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளாகவே காணப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கி உள்ளது. இதன்படி, இன்று (நவ.18) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 60 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 995 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 55 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றமில்லாமல் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.