தங்கம் வாங்க ரெடியா? அதிரடியாக குறைந்த விலை!

Author: Hariharasudhan
2 December 2024, 11:14 am

சென்னையில் இன்று (டிச.2) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 60 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: சர்வதேசச் சந்தையில் உள்ள கமாடிட்டியைப் பொறுத்தே தங்கம், வெள்ளி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த இரு வாரங்களாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறையத் தொடங்கி உள்ளது.

Silver price today

இதன்படி, இன்று (டிச.02) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 60 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 90 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 56 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: திருவண்ணாமலை மண்சரிவு.. 7 பேரின் நிலை என்ன? தொடர் மீட்புப்பணி!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 740 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 61 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் விலையில் வெள்ளி மாற்றம் இல்லாமல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 71

    0

    0