புத்தாண்டில் தொடர்ந்து எகிறும் தங்கம் – வெள்ளி விலை!

Author: Hariharasudhan
2 January 2025, 10:26 am

சென்னையில், இன்று (ஜன.02) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: அனைவருக்கும் இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துகள் எனக் கூறிக்கொண்டு, தங்கம் விலை நேற்று முதல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. 2024ஆம் ஆண்டின் முடிவில் குறைந்து காணப்பட்ட தங்கம் விலை, புத்தாண்டை வரவேற்கும் விதமாக குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது.

Gold and Silver rate today

இதன்படி, இன்று (ஜன.02) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 180 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 240 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: Am I Next? போஸ்டர் ஒட்டிய பாமக.. அனுமதி மறுத்த காவல்துறை!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 826 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் உயர்ந்து இல்லாமல் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Vidaamuyarchi AK Trisha Arjun regina salary விடாமுயற்சி படத்தில் அஜித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரெஜினாக்கு டிமாண்ட்!