தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. தவிக்கும் நகைப்பிரியர்கள்!
Author: Hariharasudhan1 February 2025, 10:28 am
சென்னையில், இன்று (பிப்.01) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 745 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: புத்தாண்டு தொடங்கிய முதலே தங்கம் விலை உயரத் தொடங்கியது. குறிப்பாக, பொங்கல் பண்டிகை நாட்களில் தங்கம் விலை சற்று ஆறுதலை அளித்தது. ஆனால், கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இதன்படி, இன்று (பிப்.01) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 745 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் அதிகரித்து 61 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: ’விசிகவுக்கும், தவெகவுக்கும் ஒரே கொள்கை தான்’.. முடிச்சு போட்ட திருமா!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 449 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 67 ஆயிரத்து 592 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.