சென்னையில் இன்று (மார்ச் 6) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் தங்கம் விலை இறங்குமுகத்தில் காணப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனால், ஒரு சவரன் 64 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
ஆனால், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இதன்படி, இன்று (மார்ச் 6) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 20 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 360 ரூபாய் குறைந்து 64 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: திமுகவைப் பாராட்டிய தேமுதிக.. கூட்டணியில் நடப்பது என்ன? உண்மை இதுதான்!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 749 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 96 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.