ரூ.65 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை.. ஒரேநாளில் கிடுகிடு உயர்வு!

Author: Hariharasudhan
14 March 2025, 10:36 am

சென்னையில், இன்று (மார்ச் 14) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 110 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் 64 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று 65 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Gol rate today

அந்த வகையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, இன்று (மார்ச் 14) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 110 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 880 ரூபாய் உயர்ந்து 65 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: இப்போதான் செந்தில் பாலாஜி ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்காரு.. அண்ணாமலை சூசகம்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 978 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 71 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் உயர்ந்து 112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?