தமிழகம்

ரூ.66 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உச்சம்!

சென்னையில், இன்று (மார்ச் 18) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு 8 ஆயிரத்து 200 ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் 65 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

அந்த வகையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, இன்று (மார்ச் 18) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்ந்து 66 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: 4வது மனைவியுடன் சென்று முன்னாள் மனைவிகள் மீது புகாரளித்த அஜித் பட நடிகர்.. என்ன நடந்தது?

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 113 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Hariharasudhan R

Recent Posts

OTT-யில் ‘டிராகன்’..அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

டிராகன் படத்தின் OTT வெளியீடு தமிழ் திரைப்பட உலகில் நடிகராகவும்,இயக்குநராகவும் தற்போது கலக்கி வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான…

42 minutes ago

‘குணா’ படம் என்னுடைய படம்…கோவையில் மலையாள இயக்குனர் பர பர பேட்டி.!

குணா திரைப்படம் குறித்து சிபி மலையில் விளக்கம் பிரபல மலையில் இயக்குநர் சிபி மலயாழ்,குணா படத்தை முதலில் தான் இயக்கவிருந்ததாக…

3 hours ago

அதிருதா சும்மா அதிரனும் மாமே…’குட் பேட் அக்லி’ லிரிக் வீடியோ ரிலீஸ்.!

கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'OG சம்பவம்' பாடலை தற்போது…

4 hours ago

7ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை.. பள்ளி விடுதியில் அரங்கேறிய பயங்கரம்!

கோவை பகுதியில் அமைந்து உள்ள பிரபல மேல் நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே பள்ளி வளாகத்தில்…

4 hours ago

மகனின் மார்பைப் பிளந்து தாய் செய்த காரியம்.. ஈரோட்டில் நடுங்க வைக்கும் கொலை!

ஈரோட்டில், மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை, தாய் உள்பட அவரது உறவினர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை…

5 hours ago

நாய்களுக்கு இடையே சண்டை.. சிறையில் பாஜக பிரமுகர் : காங்கேயத்தில் களேபரம்!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள ஆரத்தொழுவை சேர்ந்தவர் பூபதி ( 45). இவர் காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள…

5 hours ago

This website uses cookies.