ரூ.65 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. தொடர் உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

Author: Hariharasudhan
20 February 2025, 10:32 am

சென்னையில், இன்று (பிப்.20) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 35 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: பிப்ரவரி தொடங்கியது முதலே தங்கம் விலை ஏறுமுகத்திலே காணப்படுகிறது. கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டி அதிகரித்துள்ளது. இதனால், ஒரு சவரன் 64 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Gold rate today

இதன்படி, இன்று (பிப்.20) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 35 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 70 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 280 ரூபாய் அதிகரித்து 64 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழில் பாடுவது சிரமம்தான்.. பிரபல பாடகி பேச்சு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 803 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து இல்லாமல் 109 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Actress Shruti Narayanan controversyஅய்யோ நான் ஸ்ருதி இல்லை..ஆபாச வீடியோவால் பாலிவுட் நடிகைக்கு சிக்கல்.!