மாத இறுதியில் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Author: Hariharasudhan26 February 2025, 10:41 am
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: பிப்ரவரி தொடங்கி, இறுதி வந்த நிலையிலும் தங்கம் விலை ஏறுமுகத்திலே காணப்பட்டது. அதிலும், கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டி உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் 64 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
இதன்படி, இன்று (பிப்.26) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் குறைந்து 64 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: குருட்டுப் பூனை.. Mental Checkup.. ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 781 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 248 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் குறைந்து 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.