சரியான நேரம் வந்தாச்சு.. தொடர் சரிவில் தங்கம் விலை!

Author: Hariharasudhan
28 January 2025, 10:42 am

சென்னையில், இன்று (ஜன.28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த இரண்டு வாரமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தொடர் சரிவைச் சந்தித்தது.

Gold and Silver rate today

இதன்படி, இன்று (ஜன.28) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 510 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 240 ரூபாய் குறைந்து 60 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ISIS அமைப்புடன் தொடர்பில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்… சென்னை NIA சோதனையில் பகீர்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 192 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 65 ஆயிரத்து 536 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் மாற்றம் இல்லாமல் 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!