வரலாறு காணாத உச்சம்.. ஒரே நாளில் ரூ.840 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
28 March 2025, 10:39 am

சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு 8 ஆயிரத்து 200 ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் 66 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Gold and Silver rate today

அந்த வகையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, இன்று (மார்ச் 28) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 840 ரூபாய் அதிகரித்து 66 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: பரிதவித்த சூப்பர் சிங்கர் போட்டியாளரின் அம்மா..ஓடி வந்த ‘ராகவா லாரன்ஸ்’..குவியும் பாராட்டு.!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 9 ஆயிரத்து 83 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 3 ரூபாய் உயர்ந்து 114 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!
  • Leave a Reply