இமாலய உச்சம் தொட்டம் தங்கம் விலை.. கிராமுக்கு இவ்வளவு உயர்வா?

Author: Hariharasudhan
29 January 2025, 10:27 am

சென்னையில், இன்று (ஜன.29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 85 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 595 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த இரண்டு வாரமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. இருப்பினும், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தொடர் சரிவைச் சந்தித்தது.

Gold and Silver rate today

ஆனால், இன்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன்படி, இன்று (ஜன.29) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 85 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 595 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 680 ரூபாய் அதிகரித்து 60 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ’வள்ளுவரை ஆரிய அடிமை என்றார் பெரியார்’.. மீண்டும் சீமான் பரபரப்பு பேச்சு!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 285 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 66 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!