61 இல்ல ரூ.62 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை.. வெள்ளியும் தொடர் விலை உயர்வு!
Author: Hariharasudhan31 January 2025, 10:28 am
சென்னையில், இன்று (ஜன.31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 120 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த மூன்று வாரமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை தாருமாறாக உயர்ந்துள்ளது.
இதன்படி, இன்று (ஜன.31) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 120 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 960 ரூபாய் அதிகரித்து 61 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: ’இந்தியும், தமிழும் எங்கள் உயிர்’.. ஈரோடு திமுக வேட்பாளர் பேச்சால் பரபரப்பு!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 432 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 67 ஆயிரத்து 456 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் 1 ரூபாய் உயர்ந்து 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.