தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… ஒரே நாளில் ரூ.880 குறைந்து விற்பனை..!!
Author: Babu Lakshmanan23 May 2024, 10:32 am
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.
கடந்த இரு தினங்களாக குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இல்லாத நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.880 குறைந்து, ரூ.54,000க்கும், கிராமுக்கு ரூ.110 சரிந்து ஒரு கிராம் ரூ.6,750க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமுமின்றி விற்பனையாகி வருகிறது.
மேலும் படிக்க: தொடர் கனமழை எதிரொலி… பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
அதேபோல, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3.30 குறைந்து ரூ.97க்கும், ஒரு கிலோ ரூ.3,300 சரிந்து ரூ.97,000க்கும் விற்பனையாகி வருகிறது.