போட்டிபோட்டு குறையும் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Author: Hariharasudhan20 December 2024, 10:26 am
சென்னையில் இன்று (டிச.20) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: தங்கம் விலை கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்தே வந்தது. இதனிடையே, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஆனால், நேற்று முதல் தங்கம் விலை அதிரடி சரிவைச் சந்தித்து வருகிறது.
இதன்படி, இன்று (டிச.20) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 240 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் மீது பாய்ந்த புதிய வழக்கு!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 683 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 61 ஆயிரத்து 464 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு 98 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.